இம்மாத இறுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் - நந்தால் வீரங்க!
இந்த மாத இறுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21.07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, "புதிய மத்திய வங்கிச் சட்டம் இறுதியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது அது சட்டமாகியுள்ளது.
உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மை மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு எமக்கு அதிக சுதந்திரத்தையும் வலுவான பொறுப்புக்கூறலையும் வழங்கியுள்ளது.
இப்போது ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நிதி வாரியம் மற்றும் ஆளுநர்கள் குழு இந்த மாத இறுதிக்குள் ஒற்றை இலக்க பணவீக்கத்தை அடையும் நிலையில் இருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.