பிராந்திய மையமாக மாறும் திருகோணமலை! இலங்கை- இந்தியா ஒப்பந்தம்
#India
#SriLanka
#Trincomalee
#Agreement
Mayoorikka
2 years ago
இந்தியாவும் இலங்கையும் திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்தவுள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதற்கான இணக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் உள்ள திருகோணமலை நகரை ஒரு பிராந்திய மையமாக மேம்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.