நீதித்துறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் மக்கள் போராட்டம்

இஸ்ரேலில் நீதித்துறைக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான அதிகாரங்களில் சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருவதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அறிவித்தார்.
இது நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது எனக்கூறி அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இருப்பினும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் சட்ட மசோதாவிற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து நீதித்துறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல் அவிவ் நகரில் தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனர். தொடர்ந்து சாலைகள் முடக்கப்பட்டன. இருப்பினும் அங்கு பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.



