பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்! விடுக்கப்பட்ட வேண்டுகோள்

#SriLanka #Student #Meeting #Kilinochchi #Tamil Student #education #School Student
Mayoorikka
2 years ago
பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்! விடுக்கப்பட்ட வேண்டுகோள்

மீன் பிடியை நம்பி வாழும் நமது தொழிலாளர்கள் தமது எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வின் மீதும் மேலான கவனத்தை கொண்டிருக்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.

 இரணைமடு கிழக்கு அழகாபுரி நன்நீர் மீன்பிடி சங்க உறுப்பினர்கள் இன்று (21)ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 கடற்றொழிலாளர்கள் குடும்பங்களில் பிள்ளைகளின் ஆரோக்கியமான கல்வி எதிர்கொள்ளும் சவால்களை கவனத்தில் எடுத்து அவசியமான நடவடிக்கைகளை உரிய காலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்ற   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலை கவனத்திலெடுத்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில், 

 இத்தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் கல்வியறிவின்மையும் வறுமையும் சேர்ந்து போதைப்பழக்கத்துக்கு பெற்றோர்கள் அடிமையாகும் நிலமை கூடுதலான மீன்பிடி கிராமங்களில் பரவலாக அவதானிக்கப்பட் டுள்ளன.

 பெற்றோரின் வறுமை காரணமாக பாடசாலை செல்லும் பதின்ம வயதினர் தொழில்தேடி இடைவிலகுவதும் சிலநாட்கள் கழித்து போதைப்பழக்கத்துடன் பாடசாலைக்கு சமுகம் தருவதும் பின்தங்கிய கிராம பாடசாலைகளில் பரவலாக அவதானிக்கப்பட் டுள்ளன.

 தொழில் தேடும் சிறார்கள் சட்ட விரோத தொழில்களுக்கு நிரப்பந்திக்கப்படுவது அடுத்த ஆபத்தான நிலமையாகும். கிராமிய புத்தெழுச்சி கூட்டங்களில் பாடசாலை அதிபர்கள் கூடுதலாக முன்வைக்கும் முறைப்பாடுகளில் இது பிரதான பிரச்சினையாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

 இதற்காக ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூறும் முறைப்பாட்டை அவர்கள் உதாசீனம் செய்வதும் தொடர்ந்தும் அதே பழக்கத்தை மேலும் சில மாணவர்களுக்கு இப்பிள்ளைகள் தூண்டி விடுவதும் இன்று தொடர் கதையாகவுள்ளது.

 இந்த நிலமையை கவனத்திலெடுத்து மீன்பிடியை தொழிலாக கொண்டுள்ள நீங்கள் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை பிள்ளைகளின் வளமான கல்விக்காக ஒதுக்கி கொள்வதுடன் ஆரோக்கியமான கல்விச்சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் நீங்கள் மேலான கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

images/content-image/2023/07/1689956888.jpg

images/content-image/2023/07/1689956872.jpg

images/content-image/2023/07/1689956857.jpg

images/content-image/2023/07/1689956833.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!