மனைவியின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறித்த கணவன் கைது

#SriLanka #Arrest
Prathees
2 years ago
மனைவியின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவர் உரிமத்தை  தவறாக பயன்படுத்தி பணம் பறித்த கணவன் கைது

மனைவி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை தவறாக பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 வெளிநாட்டு வேலை தருவதாக கூறி சந்தேக நபர் மூன்று இலட்சத்து 30,000 ரூபாவை தன்னிடம் இருந்து பெற்றுக் கொண்ட போதிலும் வேலை கிடைக்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இளைஞன் ஒருவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சந்தேக நபரின் மனைவி மருதானை - தேவனாம் பியதிஸ்ஸ மாவத்தையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை பராமரித்து வந்துள்ளார்.

 சந்தேக நபர் அந்த நிறுவனத்தின் முகாமையாளராக பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!