காதலர்கள் வாடகைக்கு! என அறிவித்த ஜப்பான் நாடு

கடந்த 5 ஆண்டுகளில் மேலாக ஜப்பானில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் வாடகைக் காதலர்களை அறிமுகப்படுத்த ஜப்பான் அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஏராளமான இளைஞர்கள் காதல் துணையைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்ததால், இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்குக் காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். இருப்பினும், நீங்கள் அவர்களை குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இணையைத் தேர்வு செய்யும் இணையதளத்திற்கு முன்பணமும் செலுத்த வேண்டுமாம்.
மேலும் உங்களுக்கான இணையை தேர்வு செய்யக் கூடுதலாக ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். வாடகைக்கு இருக்கும் இணையை நேரடியாக வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்காகவே இருக்கும் செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.
வாடகைக்கு இருப்பவர்களிடம் பரிசுப் பொருட்களை வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.



