வவுனியா பறநட்டகல் பகுதியில் லொறி குடைசாய்ந்து விபத்து
#SriLanka
#Vavuniya
#Accident
#இலங்கை
Mugunthan Mugunthan
2 years ago
வவுனியாவில் லொறியொன்று பறநட்டகல் என்ற பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முருகண்டியில் இருந்து வவுனியா நோக்கி வெள்ளிக்கிழமை (21) அதிகாலை வந்த பாரவூர்த்தி பறநட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.