பணவீக்கத்திற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்!

#SriLanka #inflation #money #Finance
Mayoorikka
2 years ago
பணவீக்கத்திற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்!

கடந்த அரசாங்கம் அதிகமாக பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

 நாடாளுமன்றில் உரையாற்றிய போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.

 கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் (21 மாதங்களில்) 35,042.8 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது. மாதம் ஒன்றிற்கு சராசரியாக 1669 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

 இதன்காரணமாகவே பணவீக்கம் பாரியளவில் அதிகரித்தது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனால் பணவீக்கமானது 69.8 வீதமாக அதிகரித்தது. 

எனினும் கடந்த ஜுன் மாதம் 12 வீதமாக குறைவடைந்துள்ளது. ஆனால் இந்த மாதத்தின் இறுதியில் பணவீக்கமானது 7 வீதமாக சரிவடையும் எனவும் மத்திய வங்கி எதிர்பார்ப்பினை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!