மன்னாரில் பிரித்தானிய நிதி உதவியுடன் வைத்தியசாலை மகப்பேற்று பிரிவு புனரமைப்பு!

#SriLanka #Jaffna #Mannar #Meeting
Kanimoli
2 years ago
மன்னாரில் பிரித்தானிய நிதி உதவியுடன் வைத்தியசாலை மகப்பேற்று பிரிவு புனரமைப்பு!

மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவின் (UK) நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு,முழுமையாக மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புனரமைப்பு மற்றும் உபகரணம் கொள்வனவு செய்ய மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவின் நிதி உதவியுடன் சுமார் 37 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்துடன் இணைந்து மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா குறித்த பணியை முன்னெடுத்துள்ளது. முதல் கட்டமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு முழுமையாக மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 குறித்த பணியை இன்றைய தினம் வியாழக்கிழமை(20) மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா கிளையின் பொறுப்பு நிலையின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார். இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் புஸ்பகாந்தன்,மன்னார் நலன்புரிச் சங்கத்தின் பிரதி நிதிகளான வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதன், பொறியியலாளர் ராமகிருஷ்ணன், பிரதம பொறியியலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

images/content-image/1689907189.jpgimages/content-image/1689907198.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!