தலவத்துகொடையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
#SriLanka
#Death
#GunShoot
Prathees
2 years ago
தலவத்துகொட வெலிபாறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று (20) இரவு அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 41 வயதுடைய நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை தலங்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.