ஊவா பல்கலைக்கழகத்தின் மாணவன் மீது கொடூர தாக்குதல்
#SriLanka
#Student
#Attack
#University
Prathees
2 years ago
பதுளை பொதுப் பேருந்து நிலையத்தில் கண்டிக்கு பயணிக்கத் தொடங்கிய பேருந்தில் அமர்ந்திருந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். .
கடந்த 19ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் வந்த மூன்றாம் வருட மாணவர்கள் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பதுளை ஊவா மாகாண போதனா வைத்தியசாலையின் 8ஆம் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இருதரப்பு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட கற்கைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்துவதற்கு உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.