ஏகாந்த நிலையில் வழங்கப்பட்ட பட்டம்: கண்ணீருடன் பெற்றுச் சென்ற தாய்!
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஏகாந்த நிலையில் பட்டம் கையளிக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவருக்கு ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.
பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் அவர் உயிருடன் இல்லாததால், நேற்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் மனதையும் உருகச் செய்துள்ள நிலையில், குறித்த பட்டத்தை தாய் கண்ணீருடன் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஆண்டு கலைப்பீடத்தில் பட்டம் பெற்ற டில்காந்தி நவரட்னம் என்பரது பட்டத்தை அவரது தாயாரிடம் இவ்வாறு ஏகாந்த நிலையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.