ரோட்டுக்கடை காளான் மசாலா செய்யும் முறை

#Recipe #Cooking #Food #Tamilnews #How_to_make #Tamil Food
Mani
9 months ago
ரோட்டுக்கடை காளான் மசாலா செய்யும் முறை

தேவையான பொருட்கள்:

  • ¼ கிலோ முட்டை கோஸ் பொடியக நறுக்கியது
  • 1/2 கப் மைதா மாவு.
  • சோளமாவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் காஸ்மீர் சிவப்பு மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது.
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 11/2 டீஸ்பூன் தக்காளி சாஸ் தேவைப்பட்டால்
  • 1 பின்ச் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா

செய்முறை:

  • முதலில் நறுக்கிய முட்டை கோஸை நன்கு தண்ணீரால் கழுவி தண்ணீரை வடித்து ஒரு பௌலில் சேர்த்து கொள்ளவும்.
  • அடுத்து அதனுடன் மைதா மாவு, 2 டீஸ்பூன் சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது, காஸ்மீரி சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • பொன்னிறமாக பொறித்து எடுத்த பிறகு அதனை சின்ன சின்னதாக பிய்த்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை இரண்டையும், சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சாஸ், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து கிளறி விடவும்.
  • பிறகு ஒரு சின்ன பௌலில் சோளமாவு 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து வெங்காயத்தில் ஊற்றி கிளறிவிடவும்.
  • கிரேவி நல்லா திக்கானதும் 1 காப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
  • இப்பொழுது கிரேவி ஒரு கொதி வந்ததும் நாம் பொரித்து வைத்த வடைகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளறிவிடவும்.
  • பிறகு காளான் மசாலா கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.