24 வயதான தாய் தனது 11 மாத குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்

#SriLanka #Police #Missing
Prathees
2 years ago
24 வயதான தாய் தனது 11 மாத குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்

அங்குருவாதோட்டை, உருதுடாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் தனது 11 மாத பெண் குழந்தையுடன் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் உறவினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பெண்ணின் வீட்டில் சில மங்கலான இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 காணாமல் போன வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரும் தனது 11 வயது மகளும் நேற்று (18) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் அங்குருவாதொட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 அதன்படி விசாரணையை ஆரம்பித்த பொலிஸ் அதிகாரிகள் இன்று பிற்பகல் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குளிர்சாதனப் பெட்டியின் கதவிலும் வீட்டின் தரையிலும் சில மங்கலான இரத்தக் கறைகளை பொலிஸார் அவதானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும் வீட்டின் கழிப்பறை குழி மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் பொலிஸார் சோதனை நடத்தினர். எனினும் இருவரையும் காணவில்லை என்பதால் தற்போது பொலிஸார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இச்சம்பவம் தொடர்பாக தனது சகோதரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக காணாமல் போன வாசனாவின் கணவர் கூறுகிறார்.

 இது குறித்து அவர் பொலிசில் முறைப்பாடு அளித்ததையடுத்து, பொலிஸார் அந்த நபரை தற்போது கைது செய்துள்ளனர். அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!