இலங்கையின் வெளிநாட்டு சேவை முடங்கியுள்ளதாக தகவல்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கையின் வெளிநாட்டு சேவை முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், போதிய எண்ணிக்கையிலான தொழில் இராஜதந்திரிகள் இல்லாமல் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட 268 பணியாளர்களுக்கு பதிலாக தற்போது 166 இராஜதந்திரிகள் மட்டுமே பணிகளில் உள்ளதாகவும், சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு போதுமான இராஜதந்திரிகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், இலங்கையில் உள்ள சுமார் 60 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் 22 பிரிவுகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.