ஜனாதிபதியின் யோசனையை முற்றாக நிராகரித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!

#SriLanka #M. A. Sumanthiran #Lanka4
Thamilini
2 years ago
ஜனாதிபதியின் யோசனையை முற்றாக நிராகரித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!

பொலிஸ் அதிகாரங்கள் இன்றி 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை நிராகரித்துள்ளது. 

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஜனாதிபதியின் யோசனைகளை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.  

சுயநிர்ணய உரிமைக்கான இலங்கை தமிழர்களின் கோரிக்கையை தொடர்ந்து சில அதிகாரப்பகிர்விற்கான ஒரேயொரு சட்ட உத்தரவாதமாக 13 ஆவது திருத்தம் காணப்படுகின்றது எனத் தெரிவித்த சுமந்திரன், சிங்களமக்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் உட்பட 9 மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பகிர்வதற்கு முயல்கின்றது எனவும்  தெரிவித்துள்ளார்.  

இதேவேளை அபிவிருத்தி திட்டங்களை பொருத்தவரையில், கடந்த காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட பலாலி விமானநிலையம் காங்கேசன் துறைதுறைமுகம் மற்றும்; நடைமுறைக்குவராத தென்னிந்தியாவிற்கும் வடபகுதிக்கும் இடையிலான படகுசேவைகள் போன்றவையும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!