ஒரு ஆணியும் பிடுங்க முடியாது! பந்துல குணவர்தன உறுதி

#SriLanka #Bandula Gunawardana
Mayoorikka
2 years ago
ஒரு ஆணியும் பிடுங்க முடியாது! பந்துல குணவர்தன உறுதி

களணிப் பாலத்தில் உள்ள ஆணிகளை கழற்றுவது அவ்வளவு சுலபமல்ல, அவற்றைக் கழற்றுவதற்கு விசேடமான உபகரணங்கள் தேவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

 களனி மேம்பாலத்திலிருந்த ஆணிகள், நட்டுகள் மற்றும் போல்ட்கள் திருட்டுப் போனதாக கூறப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.

 பாலத்திலிருந்து நட்டுகளும் போல்ட்டுகளும் அகற்றப்படவில்லையென பாராளுமன்றத்திற்கு தெரிவித்த அமைச்சர், அவற்றை கழற்றுவதற்கான கருவிகள் சம்பந்தப்பட்ட பொறியியல் நிறுவனங்களிடம் மாத்திரமே இருப்பதாகவும் தெரிவித்தார். 

 ஜிஐ பைப்புகள், கழிவு நீர் அமைப்பின் பிவிசி பைப்புகள், காற்றுசீரமைப்புக் கருவி (AC)யின் சில பகுதிகள் மற்றும் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த நிற மின்குமிழ்கள் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

 மேம்பாலத்திலிருந்து திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5.9 மில்லியனாகும்.

 294.4 மில்லியன் ரூபா பெறுமதியான பித்தளை கம்பி, GI குழாய்கள் மற்றும் விளக்கு கம்பங்கள் போன்றவை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் திருடப்பட்டுள்ளன. 

 கடந்த வருடம் நாட்டில் மின் துண்டிப்பு ஏற்பட்ட செப்டம்பர் மாத காலப்பகுதியிலும் 2021 கொவிட் தொற்றுக் காலப்பகுதியிலும் இந்தத் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக போக்குவரத்து அமற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!