போராட்டத்தில் குதித்த கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள்!
#SriLanka
#Airport
#strike
#Lanka4
Kanimoli
2 years ago
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விமான நிலைய ஊழியர்கள் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சம்பள உயர்வைப் பெற்றுள்ளதாகவும், சேவை அரசியலமைப்பின் படி விமான நிலைய ஊழியர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுவது வழமை என்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.டி.எஸ்.பிரியந்த தெரிவித்தார்.