எசல பெரஹெரா, மின் கட்டணம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
எசல பெரஹெராவின் போது தலதா மாளிகை மற்றும் கண்டியில் அமையப்பெற்றுள்ள நான்கு கோவில்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பில் சர்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று (19) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியவதன நிலமே மற்றும் கண்டி மாவட்ட செயலாளர் சிவ்மஹா தேவால பஸ்நாயக்க நிலமேஸ் உட்பட பல பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட எசல பெரஹெராவுக்காக இலங்கை மின்சார சபை ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான மின் கட்டணத்தை சமர்ப்பித்திருந்தது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்கட்சி அரசியல் குழுக்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதையடுத்து இது சமூகத்தில் பேசுபொருளாக மாறியதுடன், மதிப்பிடப்பட்ட மின்கட்டணம் பிரச்சினையில்லை எனவும், தலதா மாளிகையால் அதனை செலுத்த முடியும் எனவும் தியவதன நிலமேய அறிக்கை வெளியிட்டுள்ளார்.