யாழில் ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதை ஏற்றிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண போதனா போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார்.
எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.