எரிவாயு சிலிண்டர் வெடிப்பு போன்றே தற்போது சுகாதாரத்துறை மீதான குற்றச்சாட்டுக்கள்!

#SriLanka #Health
Mayoorikka
2 years ago
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு போன்றே தற்போது சுகாதாரத்துறை மீதான குற்றச்சாட்டுக்கள்!

சுகாதாரத் துறையின் மீதான குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட செயலாகவே பார்க்கப்படுகின்றது என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

 நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “பேராதனை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. 

 குறித்த யுவதிக்கு அந்த மருந்து செலுத்தப்பட்ட அதேநேரம், அதே அறையில் இருந்த 12 பேருக்கும் அந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் 4 பேருக்கு அந்த மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளது. எனவே, எதன் அடிப்படையில் இது தரமற்ற மருந்து என இவர்கள் கூறுகிறார்கள்? 2003 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று, நாட்டின் பிரபலமான நிறுவனமான பவர் நிறுவனம் தான் இந்த மருந்தை முதன் முதலில் கொண்டுவந்தது. 

 இந்த மருந்தானது 20 வருடங்களாக நாட்டில் பாவனையில் இருக்கும் ஒன்றாகும். இவ்வாறான நிலையில், இது இலவச சுகாதாரத் துறைக்கு எதிரான சதித்திட்டமாகவே இந்த குற்றச்சாட்டுக்களை நாம் பார்க்கிறோம். இது திட்டமிடப்பட்ட செயலாகும். 

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக நாட்டில் வெடித்தன. 

 ஆனால், அவர் இராஜினாமா செய்து சென்ற பின்னர், அவ்வாறு ஒரு சம்பவம் கூட பதிவாகவில்லை. அதேபோன்றுதான் இந்த செயற்பாடும் கருதப்படுகிறது. இது மிகவும் மோசமானதொரு செயற்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!