ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நாளை வேலை நிறுத்தம்
#SriLanka
#Protest
#Hospital
#doctor
Prathees
2 years ago
வழமையாக இல்லாத வகையில் நாளை (19) ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, வைத்தியசாலையின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்தும் தீர்வுகளை வழங்க தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாளைய தினம் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு வைத்தியசாலை பணிப்பாளரே காரணம் எனவும், இதன் காரணமாக சிறு பிள்ளைகள் எதிர்பாராவிதமாக அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
வேலை நிறுத்தத்தின் போது மருத்துவமனையில் அவசர சேவைகள் மட்டுமே செயல்படும்.