பாரிய சுற்றாடல் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம்: வெளியான அதிர்ச்சி தகவல்

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Kanimoli
2 years ago
பாரிய சுற்றாடல் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம்: வெளியான அதிர்ச்சி தகவல்

அரசாங்கம் வகுத்துள்ள 2011-2048 தேசிய பௌதீகத் திட்டத்திற்கு அமைய பாரிய சுற்றுச்சூழல் அழிவு இடம்பெற்று வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 “காடுகளை அழிப்பது, குறிப்பாக கிராபைட் போன்றவற்றுக்காக சுரங்கங்களைத் தோண்டுவது, பொஸ்பேட் பாறைகளை விற்பனை செய்வது, தண்ணீரை விற்பனை செய்யத் திட்டமிடுவது, இவை அனைத்தும் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதை எங்களால் காணக்கூடியதாக உள்ளது.

” இந்த அறிக்கையை நாட்டு மக்களிடம் இருந்து அரசாங்கம் மறைத்து வருவதனால் நாட்டில் பாரிய சுற்றாடல் அழிவுகள் ஏற்படுவதாக கூறும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது இலங்கையில் நாளொன்றுக்கு 65 ஏக்கர் காடுகள் அழிவடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் ஜூலை 17ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், 2011-2048 தேசிய பௌதீகத் திட்டத்திற்கு அமைய, எதிர்காலத்தில் இலங்கையில் 19 விமான நிலையங்கள், 44 துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைப்பு உருவாக்கப்படும். "குறிப்பாக 6 பெரு நகரங்கள் அல்லது 6 பெரு நகர வலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்படும் எனக் கூறலாம்."

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!