விபத்தில் சிக்கியது ரஷ்யாவின் போர் விமானம்!
#world_news
#Russia
#Lanka4
Dhushanthini K
2 years ago

ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்குப் பகுதியில் உள்ள கிராஸ்டோனர் என்ற இடத்தில் Su-25 என்ற தரைவழி தாக்குல் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொழிநுட்பக்கோளாறு காரணமாக விமானம் நிலைத்தடுமாறிய நிலையில், சுதாகரித்துக்கொண்ட விமானி, ஜெட்பேக் மூலம் அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விமானம் அசோவ் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இருந்து வருவதாகவும்,உக்ரைன் போரில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



