தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இரு தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்கள் தண்டனை அனுபவித்த, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த சண்முகரட்ணம் சண்முகராஜா, கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா நவரட்ணம் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது மேலும் 17 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.