பயங்கரவாத சட்டம் மீளாய்வு செய்யப்படும் - ரணில்!
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (18.07) இடம்பெற்றது.
இதன்போது ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும், பயங்கரவாத சட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நாளை (19) நடைபெற உள்ளது.
மேலும், உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களையும் பரிசீலிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜூலை 18ஆம் திகதி வரைவுக் குழு ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, திருத்தங்கள் குறித்து கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர், வரைவு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.