தானியங்களை வெடிமருந்துகளாக பயன்படுத்தும் ரஷ்யா!
#world_news
#Russia
#Lanka4
Dhushanthini K
2 years ago

தானியங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலக தீர்மானித்துள்ள நிலையில், ரஷ்யாவின் முடிவை போலந்து கடுமையாக விமர்சித்துள்ளது.
நிச்சயமாக ரஷ்யா தானியங்களை வெடிமருந்துகளாகப் பயன்படுத்துகிறது, எனவும் இம்முறை அது மீண்டும் நடப்பதாகவும் போலந்தின் விவசாய அமைச்சர் ராபர்ட் டெலஸ் கூறினார்.
அறுவடைக்குப் பிறகு உக்ரேனிய ஏற்றுமதிகள் எல்லைகள் வழியாகப் மாயமாகலாம் எனவும், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று ரஷ்யா நேற்று (17.07) கூறியது.



