களனிப் பால ஆணிகள் விவகாரம்: குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

#SriLanka #Police #Bandula Gunawardana #Lanka4
Kanimoli
2 years ago
களனிப் பால ஆணிகள் விவகாரம்:  குற்றச்சாட்டு தொடர்பில்  விசாரணை

களனி பாலத்தில் இருந்து இருபத்தெட்டு கோடி ஆணிகள் அகற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பந்துல குணவர்தன தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; “.. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தினர். நஷ்டம் குறித்து பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. பாலத்திற்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உண்மையான புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

 ரயில்பாதையில் இருக்கும் சிறிய இரும்புத் துண்டையும் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. ரயில்பாதையில் உள்ள இரும்பு அகற்றப்படும் போது ரயில் கூட தடம் புரளலாம். இந்நிலைமையை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது…”எனத்தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!