அரசாங்கம் கல்விச்சேவையில் அசமந்தப் போக்கு: சஜித் குற்றச்சாட்டு

#SriLanka #Sajith Premadasa
Mayoorikka
2 years ago
அரசாங்கம் கல்விச்சேவையில் அசமந்தப் போக்கு: சஜித் குற்றச்சாட்டு

ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களின் சேவை மிகவும் முக்கியமானது என்றும் ஆசிரியர் பயிற்சி வழங்கும் பணியில் பெரும் பங்கு வகித்தாலும், பணியில் 2089 பேர் இருக்க வேண்டும் என்றாலும் 2020 ஆம் ஆண்டுக்கான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1090 வெற்றிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது 660 பேர்களே பணிபுரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 ஏறக்குறைய 1500 வெற்றிடங்கள் இருந்த போதிலும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புள்ள தரப்பினர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படையான முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளனர் என்றும், 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, இந்த ஆசிரியர் சேவை உகந்த அளவில் இருக்க வேண்டும். 

என்றும் இத்தகைய வெற்றிடங்களை வைத்து சீரான கல்வியை வழங்க முடியாது, என்பதால் மட்டுப் படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் திறந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 திறந்த சேவை மூலம் 384 பேரையும் மட்டுப் படுத்தப்பட்ட சேவை மூலம் 706 பேரையும் இணைத்து உடனடியாக இதனை அமுல் படுத்த வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!