கடந்த இரு மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் 158 மில்லியன் பெறுமதியுள்ள போதைப்பொருட்கள் மீட்பு
#Arrest
#drugs
#Ocean
Prasu
2 years ago

கடந்த இரு மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், 158 மில்லியன் பெறுமதியுள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கோகோயின் மற்றும் மரிஜுவானா ஆகிய போதைப் பொருட்களே பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை தடுத்து நிறுத்திய அமெரிக்க கடலோர காவல்படை நேற்றைய தினம் சான் டியாகோவில் 11,600 பவுண்டுகளுக்கும் அதிகமான கோகோயின் மற்றும் 5,500 பவுண்டுகள் பெறுமதியான மரிஜுவானாவை கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில், பல ஏஜென்சிகள் மற்றும் மெக்சிகன் கடற்படைகள் இணைந்து நடவடிக்கை எடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



