தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் தொடரும் சிக்கல்: சபையில் சஜித்
#SriLanka
#Parliament
#Sajith Premadasa
Mayoorikka
2 years ago
தேர்தலில் பங்கேற்ற அரச பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தோடு சில அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற துணை நிறுவனங்களினது ஊழியர்களுக்கு உரிய விடுமுறை கூட கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதால் இந்த சிக்கல்நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலை அவர்களது சேவைக் காலம் முழுவதையும் பாதிப்பதாகவும், இந்நிலைமைக்கு தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும் இது வரை தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் சுற்றுநிருபம் வெளியிட்டும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியாதது ஏன் என்று வினவுவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.