ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்! சிலர் புறக்கணிப்பு
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ரணில்விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணமாகவுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.