இலங்கையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
நாட்டில் எதிர்வரும் வாரங்களில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதுள்ள கோதுமை மா இரண்டு வார காலத்திற்கே போதுமானது எனவும், இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவம், அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.