பதவி விலகத் தயாராக இல்லை - கெஹலிய ரம்புக்வெல்ல!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பதவி விலகத் தயாராக இல்லை  - கெஹலிய ரம்புக்வெல்ல!

ஒரு சிலரின் எதிர்ப்பினால் தான் பதவி விலகத் தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது, பதவி விலக உள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதலிளித்த அமைச்சர், 100, 200 பேர் வந்து ராஜினாமா செய்யச் சொன்னால், அதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை சிறுமைப்படுத்தக் கூடாது என்பது என் கருத்து” எனத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இவ்வாறான விடயங்களின் பின்னால் இருப்பவர் யார் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், சதிகார் யார் என்று தெரிந்தால் அவரின் கழுத்தை பிடித்து கொண்டு வருவேன். அவர் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்படுவார். 

இது தொடர்பாக தேவையான நிறுவனங்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதை இப்போதைக்கு கூற முடியாது. எனத் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!