ஏழரை மாதங்களில் 07 இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
கொரோனா தொற்றுக்குப் பிறகு சுற்றுலா துறை வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இம்மாத இறுதிக்குள் ஏறக்குறைய ஏழு இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, ஜூலை 16 ஆம் திகதி வரை, மொத்தம் 694,908 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜுலை மாதத்தில் சுற்றுலா பயணிகளின் மேம்பட்ட வேகத்தை காணமுடிவதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
தினசரி சராசரி வருகை சுமார் 3,300 ஆக அதிகரித்துள்ளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இது கடந்த மே மாதத்தில், 2800 ஆக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஏழரை மாதங்களுக்கு மிகப்பெரிய சுற்றுலா மூல சந்தையாக இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் ரஷ்யா காணப்படுகிறது. அங்கிருந்து ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது, ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 8 சதவீதத்தை இங்கிலாந்து கொண்டுள்ளது. இதனையடுத்து ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.