ரணிலுடன் இணைய காத்திருக்கும் எதிர்கட்சி உறுப்பினர்கள்!
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த பெரும்பாலான எதிர்க்கட்சியினர் மீண்டும் கட்சியில் இணைவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்று (17.07)இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து பச்சைக்கொடியை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்த அவர், ஏனைய குழுக்களுடன் இணைந்து அடுத்த தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பணிகளில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தலையிடுவதாக சுட்டிக்காட்டிய அவர் தற்போதைய தேவை பிரிவினை அல்ல எனவும், ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து வேறுபாடுகள் காரணமாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒருபோதும் சாத்தியமில்லை எனவும், சகலருக்கும் ஒன்றிணைந்து தீர்வுகளை காண ஜனாதிபதி முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.