அரசாங்கத்தை பலவீனப்படுத்த ஒருசிலர் முயற்சி! சாகர காரியவசம்

#SriLanka
Mayoorikka
2 years ago
அரசாங்கத்தை  பலவீனப்படுத்த ஒருசிலர் முயற்சி! சாகர காரியவசம்

நாட்டில் சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

 கம்பஹா பகுதியில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தியதை போன்று தற்போதைய அரசாங்கத்தையும் பலவீனப்படுத்த ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். இதற்கு அரச அதிகாரிகளில் ஒருசிலரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். 

 பொதுஜன பெரமுன பலமானது. 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற சகல தேசிய தேர்தல்களிலும் அமோக வெற்றிப் பெற்றோம். கட்சி பலமானது ஆனால் நாம் தெரிவு செய்த அரச தலைவர் சிறந்த முறையில் செயற்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

 போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் இராச்சியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பரவலாக இடம்பெற்றது. இந்த சம்பவம் அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. 

கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை. ஆகவே இவ்வாறான ஒருசில சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

 முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தியதை போன்று தற்போதைய அரசாங்கத்தையும் பலவீனப்படுத்த ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருசில அரச சேவையாளர்களும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

 மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்து தரம் தொடர்பில் தற்போது பாரிய பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. 

கடந்த கால சூழ்ச்சிகள் தற்போது செயற்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!