13 இற்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவிற்கு பறந்த கடிதங்கள்!
#India
#SriLanka
Mayoorikka
2 years ago
வடக்கு - கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைதூதரகத்தில் இன்று கையளித்தனர்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தக் கோரி இந்திய பிரதமருக்கு குறித்த கடிதம் வரையப்பட்டுள்ளது.
இதற்கு டெல்லியிலிருந்து ஒரு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என தாம் நம்புவதாகவும் வடக்கு - கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி, தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் அரசியில் கட்சிகள், இணைந்தும், தனித்தனியாகவும் இந்திய பிரதர் நரேந்திர மோடிக்கான கடிதங்களை கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது