எகிப்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 08 பேர் பலி!

#world_news #Lanka4 #Egypt
Dhushanthini K
2 years ago
எகிப்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 08 பேர் பலி!

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். 

மத்திய கெய்ரோவின் வடக்கே உள்ள Hadayek el Kobba  என்ற இடத்தில் அமையப்பெற்றிருந்த கட்டிடம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. 

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அத்துடன் எகிப்தில் மோசமான கட்டுமானம்  காரணமாக இவ்வாறான சம்பவங்கள் பலமுறை  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!