மனித புதைக்குழி மூலம் மிகப் பெரிய உண்மைகள் தெரியவரும் - சுமந்திரன்!
உண்மையைக் கண்டறிவதில் மனிதப் புதைகுழிகள் மிகப் பெரிய பங்கை வகிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் மனிதப்புதைக்குழு அகழ்வு குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழிகள் உண்மையைக் கண்டறிவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் எனவும், அதனாலேயே குறித்த பகுதிக்கு தான் சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விடயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவித்த சுமந்திரன், இந்த விடயத்தில் சர்வதேச அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
உரிய கட்டமைப்பின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு, இந்த விவகாரம்சர்வதேச நியதிகளுக்கு அமைவாக கையாளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
சர்வதேச ரீதியில் போர்க்குற்றங்கள் இடம்பெற்ற நாடுகளில் இத்தகைய மனிதப்புதைகுழிகளில் இருந்துதான் பல உண்மைகள் வெளிவந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய சுமந்திரன், இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளை சர்வதேசத்தின் பங்களிப்புடன் உரியவாறு கையாள்வது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.