பாராளுமன்ற சிறப்புரிமை மீறல்கள் குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க யோசனை!
#SriLanka
#Parliament
#Lanka4
Thamilini
2 years ago
பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடயம் குறித்த பிரேரனை நாளைய தினம் (18.07) பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.