தரமற்ற மருந்து விநியோகத்திற்கு எதிராக போராட்டம்!

#SriLanka #Protest #Lanka4
Thamilini
2 years ago
தரமற்ற மருந்து விநியோகத்திற்கு எதிராக போராட்டம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை தாதியர் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

குறித்த போராட்டம் இன்று முதல் (17.07) முன்னெடுக்கப்படும் என அச்சகத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார்.  

தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளை சேர்ந்த சுகாதாரத் துறை ஊழியர்களின் பங்கேற்புடன்  குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் கொழும்பைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!