சுகாதாரத்துறையில் நிலவும் குறைபாடுகளை அகற்ற நடவடிக்கை!

#SriLanka
Mayoorikka
2 years ago
சுகாதாரத்துறையில் நிலவும் குறைபாடுகளை அகற்ற நடவடிக்கை!

சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அது தொடர்பான பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சந்திம ஜீவந்தரவிக் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமித்துள்ளார்.

 கடந்த சில மாதங்களுக்குள் அரச வைத்தியசாலைகளில் பதிவாகிய மரணங்கள் தொடர்பிலம் குறித்த குழு ஆராயவுள்ளதாகவும் ஒவ்வாமை மற்றும் ஔடதங்கள் குறித்து சிறந்த அறிவு படைத்த வல்லுனர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர், எமது சகோதர ஊடகமான டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

 அதன்படி, சர்ச்சைக்குரிய சமீபத்திய மரணங்கள் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தி குறித்த குழுவினர் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிகிறது. நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்க இக்குழு உதவி புரியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!