கிரிமியா பாலம் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!
#world_news
#Russia
#Lanka4
Thamilini
2 years ago
கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அவசரநிலை எற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
க்ராஸ்னோடர் பிரதேசத்தில் இருந்து 145 வது தூண் பகுதியில் அவசரநிலை ஏற்பட்டது எனவும் கிரிமியா பகுதியின் ஆளுநர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார்.
சட்ட அமலாக்க முகவர் மற்றும் அனைத்து தொடர்புடைய சேவைகளும் குறித்த பகுதியின் நிலைமையை கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிமியன் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்துவது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் கிரிமியன் அதிகாரிகள் வழங்குவார்கள் என்று ரஷ்யாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.