எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடல்
#SriLanka
#Lanka4
#Ship
Kanimoli
2 years ago
எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (17) சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் நாளை(18) மற்றும் நாளை மறுதினம்(19) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.