காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 11 பேர் உயிரிழப்பு!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

காங்கோவின் வடகிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எம்.23 எனப்படும் கிளர்ச்சிக் குழுவினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த கிளர்ச்சிக் குழுவிற்கும், ருவாண்டாவிற்கும் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ருவாண்டா மறுத்துள்ளது. எவ்வாறாயினும், கொங்கோவில் வன்முறைச் செயற்பாடுகள் காரணமாக 5.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



