சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியாமல் படிப்பை கைவிட்ட எட்டு மாணவர்கள்

#SriLanka #students
Prathees
2 years ago
சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியாமல்   படிப்பை கைவிட்ட எட்டு மாணவர்கள்

 அநுராதபுரம் பல்கலைக்கழகத்தில் (தொழிற்சாலை பல்கலைக்கழகம்) மூன்றாண்டு உயர் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைநெறியை பயிலுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட சுமார் எட்டு மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களின் மனிதாபிமானமற்ற சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதற்கிடையில், சிரேஷ்ட ஆண் மாணவர்கள்,புதிய மாணவர்களை, கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் நாட்களில், கல்லூரியின் குளியலறைக்கு அழைத்துச் சென்று, அவர்களது பேன்ட் மற்றும் உள்ளாடைகளை வலுக்கட்டாயமாக கழற்றி, பின்,இ புதிய மாணவர்களை பார்க்க வைப்பதாக கூறப்படுகிறது.

 மேலும், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதாக கூறி, சில மூத்த மாணவர்கள், புதிய மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளுக்கு சென்று, துஷ்பிரயோகம் செய்து, உறவினர்களிடம் கூறியுள்ளனர்.

 இதனால் தற்போது சில புதிய மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என ஓய்வு பெற்ற அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 சில பெரியவர்களிடம் இது தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய வீடியோ டேப்கள்இ ஆடியோ டேப்புகள் கூட இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அதிகாரிகள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்வோம் என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!