பாராளுமன்ற விவகாரங்களுக்கான விசேட குழுவின் கூட்டம் இன்று!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பாராளுமன்ற விவகாரங்களுக்கான விசேட குழுவின் கூட்டம் இன்று!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று  (17.07) நடைபெறவுள்ளது. 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில்,  எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தின் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதுடன், பல சட்டமூலங்கள் குறித்தும் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

அடுத்த பாராளுமன்ற அமர்வில், சுங்கச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.

 மேலும் வங்கி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இந்த பாராளுமன்ற வாரத்தில் நடைபெறும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 இதேவேளை, நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களைக் கண்டறிய அரசாங்கம் நியமித்துள்ள குழுவிற்குப் பதிலாக மாற்றுக் குழுவொன்றை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதுடன், இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!