பொரளையில் திடீர் சுற்றிவளைப்பு : 13 பேர் கைது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கை நேற்று (16) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில், பொரளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 13 நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.