மதுபோதையில் நீராட சென்றவர் மாயம்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
ஹன்வெல்ல அடிகல பிரதேசத்தில் களனி ஆற்றில் குளிப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்தஇளைஞன் மேலும் இருவருடன் நேற்று (16) மாலை களனி ஆற்றில் குளிப்பதற்குச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீராடச் சென்றபோது குறித்த நபர் மது அருந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காணாமல் போன நபரை தேடும் பணியில் ஹங்வெல்ல பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.